கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கும், மருத்துவத்துறையினருக்கும் வாக்குவாதம்: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்றுச் செல்லலாம், என மாவட்ட நிர்வாகம்"அறிவித்ததைத் தொடர்ந்து,"கடந்த ஒரு மாதமாக தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், மருத்துவத் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், மருத்துவத் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்றுச் செல்லலாம், என மாவட்ட நிர்வாகம்"அறிவித்ததைத் தொடர்ந்து,"கடந்த ஒரு மாதமாக தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந் நிலையில் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக,பரவலாக மழை பெய்ததால் அதிகமான குளுமை நிலவி வருகிறது. வார விடுமுறையாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

இந் நிலையில் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகளை மருத்துவத் துறையினர் வெள்ளிநீர் வீழ்ச்சிப் பகுதியில் கரோனா பரிசோதனை நடத்தினர். சிலர் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணியவில்லை, இ-பாஸ் கேட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஏரிச்சாலைப் பகுதியில் வந்த பயணிகளிடமும் மருத்துவத் துறையினர் முகக்கவசம் அணியாத நபர்களிடம் அபராதம் வசூலித்தனர். இதனால் ஏரிச்சாலை, செவண்ரோடு, அப்சர்வேட்டரி சாலை ஆகியப் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கும், மருத்துவத் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்ப இடத்திற்கு காவல்துறை சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினர் .

கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகளை மருத்துவத்துறையினர்,சுகாதாரத் துறையினர் தரக்குறைவாக பேசிவருவதாகவும், பயணிகளிடம் அத்துமீறி பணம் வசூலிப்பதாகவும் பயணிகள் அதிருப்தியுடன் தெரிவித்தனர்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு"பாதுகாப்பு வழங்கியும்,மரியாதையுடன் நடத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகம்,காவல்துறையினர் அறிவுறுத்தினர் ஆனால் கொடைக்கானலில் பணியாற்றுபவர்கள் எந்த உத்தரவையும் மதிக்கவில்லையென சமூக ஆர்வலர்கள்" தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com