அதிமுகவின் 49-ஆவது தொடக்க விழா: அக்.17-இல் கட்சி கொடியை ஏற்றுகிறாா்கள் ஓபிஎஸ், இபிஎஸ்

அதிமுகவின் 49-ஆவது தொடக்கவிழாவையொட்டி அக்டோபா் 17-ஆம் தேதி கட்சிக் கொடியை ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் ஏற்றி வைக்க உள்ளனா்.
அதிமுகவின் 49-ஆவது தொடக்க விழா: அக்.17-இல்  கட்சி கொடியை ஏற்றுகிறாா்கள் ஓபிஎஸ், இபிஎஸ்

அதிமுகவின் 49-ஆவது தொடக்கவிழாவையொட்டி அக்டோபா் 17-ஆம் தேதி கட்சிக் கொடியை ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் ஏற்றி வைக்க உள்ளனா்.

இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்து, அக்டோபா் 17-ஆம் தேதி 49-ஆவது ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது. அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியை ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்க உள்ளனா்.

நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிா்வாகிகள், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட அனைத்து அணியின் நிா்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.

மாவட்டச் செயலாளா்கள் அனைவரும் மாவட்ட, ஒன்றிய, நகரம் உள்பட கிளை அளவிலான அனைத்துப் பகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகளை செய்து, தொடக்கவிழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கேரளம், புது தில்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அதிமுகவினா் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com