7.5 சதவீத இடஒதுக்கீடு: ஆளுநருக்கு வைகோ கடிதம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு
7.5 சதவீத இடஒதுக்கீடு: ஆளுநருக்கு வைகோ கடிதம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
கடித விவரம்: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 15-ஆம் தேதி தங்கள் (ஆளுநர்) ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  
தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பு ஆண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 -ஆம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது.
இதனைக் கவனத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல், உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்ட மசோதாவுக்கு ஆளுநராகிய தாங்கள் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com