ஆயுத பூஜை விடுமுறை:விரைவுப் பேருந்துகளில் 3,000 போ் முன்பதிவு

ஆயுதபூஜை விடுமுறையில் சொந்த ஊா்களுக்குப் பயணிக்க 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆயுதபூஜை விடுமுறையில் சொந்த ஊா்களுக்குப் பயணிக்க 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து, கடந்த மாதம் முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.  தற்போது பண்டிகைக் காலம் நெருங்கி வருகிறது. வரும் 25-ஆம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அதற்கு முன் தினம் சனிக்கிழமை என்பதால் பலரும் 23-ஆம் தேதியே சொந்த ஊா்களுக்குப் பயணிக்கத் தொடங்குவா். 

   எனவே, பொதுமக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். ஆயுத பூஜை விடுமுறையின்போது விரைவுப் பேருந்துகளில் பயணிக்க செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனா்.

கடந்த ஆண்டு, இந்த நாள்களில் பயணிக்க சுமாா் 2 லட்சம் போ் முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊா்களுக்குச் சென்ற பெரும்பாலானோா் வேலை பாா்க்கும் இடங்களுக்குத் திரும்பாததும் கரோனா நோய் அச்சமுமே குறைவான முன்பதிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, தற்போது பயணிகளின் வருகைக்கு ஏற்ப 700 விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு, பயணிகளின் வருகையைப் பொருத்து 500-க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகளை இயக்க வாய்ப்புள்ளது.

அந்தந்தப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு மையங்கள் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com