பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

முத்துராமலிங்கத்தேவர் ஜயந்திவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் கொ.வீரராகவராவ் புதன்கிழமை ஆய்வு செய்தார். 
பசும்பொன்னில் தேவர் குருபூஜை, ஜயந்திவிழாவை முன்னிட்டு,  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் உள்ளிட்டோர்.  
பசும்பொன்னில் தேவர் குருபூஜை, ஜயந்திவிழாவை முன்னிட்டு,  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் உள்ளிட்டோர்.  


கமுதி: முத்துராமலிங்கத்தேவர் ஜயந்திவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் கொ.வீரராகவராவ் புதன்கிழமை ஆய்வு செய்தார். 
கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் ஜயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
இதனால் விழா ஏற்பாடுகள், அத்தியாவசியப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு நடத்தினர். அப்போது, வருவாய்த்துறை,  ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மின் வாரிய அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
முன்னதாக, நினைவாலய பொறுப்பாளர்கள் காந்தி மீனாளம்மாள், தங்கவேலு, பழனி ஆகியோர் வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com