நவதானிய காப்பில் மேல்மருவத்தூர் அம்மன் காட்சி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஆறாம் நாள் நிகழ்ச்சியாக கருவறை அம்மனுக்கு நவதானியம் காப்பு சிவபார்வதி அமைப்பில் பக்தர்களுக்குக் காட்சி அளித்துள்ளார். 

லட்சார்ச்சனை தங்கரத சித்தர் பீட வளாக வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு மதுரை புதுக்கோட்டை சிவகங்கை திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் பாதபூஜை செய்து வரவேற்பு அளித்தனர். 

வழக்கம்போல அரசின் வழிகாட்டுதலின்படி அம்மன் தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு முகக் கவசத்துடன் கிருமி நாசினியாகக் கையை கழுவி, வெப்பமானி மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு வரிசையில் வந்த பக்தர்களை ஆன்மிக இயக்க நிர்வாகிகள் அனுமதித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com