கடமையை மக்களுக்கு காட்டும் சலுகையைப் போல் நினைக்கும் முதல்வர்: ஸ்டாலின்

கடமையை மக்களுக்கு தான் காட்டும் சலுகையைப் போல் முதல்வர் நினைக்கிறார் என்று இலவச கரோனா தடுப்பூசி அறிவிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: கடமையை மக்களுக்கு தான் காட்டும் சலுகையைப் போல் முதல்வர் நினைக்கிறார் என்று இலவச கரோனா தடுப்பூசி அறிவிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல பழனிசாமி நினைத்துக் கொள்கிறார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதலமைச்சர், இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com