அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் முன்வைத்து நிறைவேற்றுக: கு.பாலகிருஷ்ணன்

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 12 லட்சம் அரசுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை சங்கம் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். தேர்தல் நேரங்களில் வைக்கப்படும் கோரிக்கைகளை அண்மைக் காலமாக அரசியல் கட்சியினர் நிறைவேற்றுவதில்லை.

இந்த நிலையில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசுப் பணியாளர்களின் முக்கியமான 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்கள் தேர்தல் அறிக்கையில் முன்வைத்து செயல்படுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைவரும் ஓய்வூதியம் பெறும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கான 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18,000, ஓய்வுதியம் ரூ. 9,000 வழங்க வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் உள்ள பொது கோரிக்கைகளை அந்தந்த சங்கங்களை அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும். பணி நியமனம், பதவி உயர்வு, பணியிடமாறுதல் ஆகியவற்றில் முறைகேடு இல்லாமல் இருநதால்தான், பணியிடங்களிலும் முறைகேடுகள் இல்லாமல் தொடரும்.

தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங் முறை பணியாளர்களால், குறிப்பாக கிசான் நிதி திட்டத்தில் அவுட்சோர்சிங் பணியாளர்கள் முறைகேடு நடந்துள்ளது. அதனால் அரசுத் துறைகளில் நிரந்தரப் பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அனைத்துக் கட்சியினருக்கும் கோரிக்கைகளை வைக்கிறோம் என்றார். மாநிலத் தலைவர் பி கே சிவக்குமார், சிவக்குமார் சுந்தர்ராஜன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com