உமறுப்புலவர் பிறந்த நாள்: எட்டயபுரம் நினைவிடத்தில் அமைச்சர் அஞ்சலி

உமறுப்புலவர் பிறந்த நாளையொட்டி எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு மலர் போர்வை சாத்தி புகழ் அஞ்சலி செலுத்தினர்.
உமறுப்புலவர் பிறந்த நாளையொட்டி எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு மலர் போர்வை சாத்தி புகழ் அஞ்சலி செலுத்தினர்.
உமறுப்புலவர் பிறந்த நாளையொட்டி எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு மலர் போர்வை சாத்தி புகழ் அஞ்சலி செலுத்தினர்.


விளாத்திகுளம்: உமறுப்புலவர் பிறந்த நாளையொட்டி எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு மலர் போர்வை சாத்தி புகழ் அஞ்சலி செலுத்தினர்.
 
சீறாப்புராணம் காப்பியம் தந்த தமிழறிஞர் அமுதகவி உமறுபுலவரின் 378 ஆவது ஆண்டு பிறந்த தின விழா அரசு சார்பில் எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபம் வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உமறுப்புலவர் சங்க தலைவர் காஜா மைதீன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டு உமறுப்புலவரின் நினைவிடத்தில் மலர் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது அவர்களாக முடிவு செய்ய வேண்டிய விஷயம். அரசு இதில் நேரடியாக தலையிட்டு கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், நடிகர் சங்கத்தினர் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். 

திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் அங்குள்ள சூழ்நிலையை பொறுத்து விழாக்கால சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

கரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற தகவல் வந்தவுடன்,  இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் தான் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதிலும் அரசியல் செய்கிறார். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள்" என்றார்.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, எட்டயபுரம் வட்டாட்சியர் ஐயப்பன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com