ஈரோட்டில் ரூ.79.40 லட்சத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் ரூ.79.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு இன்று தொடங்கி வைத்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் ரூ.79.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு இன்று தொடங்கி வைத்தனர்.

தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் ரூ.19 லட்சம் மதிப்பில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடந்தது எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் பூமி பூஜையில் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர். 

இதைப்போல் காமராஜர் நகரில்  ரூ.16.50 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, பூம்புகார் நகரில் வடிகால் வாரியம் சார்பில் ரூ.17 மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையிலும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து வீரப்பன்சத்திரம் அம்பேத்கர் நகரில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடை, எல் .ஜி. எஸ் காலணி பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தனர் அதைத் தொடர்ந்து, ஈரோடு வ.உ.சி பார் பகுதியில் ரூ.9.90 லட்சம் மதிப்பில்  நவீன கழிப்பிடம் அமைப்பதற்கான பூமி பூஜையிலும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கே சி பழனிச்சாமி பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன், ஜெயராஜ், தங்கமுத்து, ராமசாமி, ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com