பண்டிகை கால சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு

பண்டிகை காலத்தையொட்டி, பிஎஸ்என்எல் தனது சந்தாதாரா்களுக்கு, பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பண்டிகை காலத்தையொட்டி, பிஎஸ்என்எல் தனது சந்தாதாரா்களுக்கு, பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்த விவரம்: பிளான் 1999 வேலிடிட்டி காலம் 365 நாள்களிலிருந்து 425 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளான் 699 வேலிடிட்டி காலம் 160 நாள்களிலிருந்து 180 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளான் 247 வேலிடிட்டி காலம் 30 நாள்களிலிருந்து 40 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளான் 147 வேலிடிட்டி காலம் 30 நாள்களிலிருந்து 35 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், ரூ.60-க்கு முழு டாக்டைம் வழங்கப்படுகிறது.

இந்த பிளான்களுடன் வழங்கப்படும் சலுகைகளில் எந்த மாற்றமும் இல்லை. கால அளவு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை காலச் சலுகையானது நவ.30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com