மின்சார ரயில்களை இயக்க உத்தரவிடுங்கள்: ரயில்வே அமைச்சருக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னை புகா் மின்சார ரயில் சேவைகளைத் தொடங்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
மின்சார ரயில்களை இயக்க உத்தரவிடுங்கள்: ரயில்வே அமைச்சருக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னை புறநகா் மின்சார ரயில் சேவைகளைத் தொடங்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயலுக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

தமிழகத்துக்குள்ளும், வெளியேயும் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. இதேபோன்று, பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளை மாநில அரசு அனுமதித்துள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் வகையிலான மின்சார ரயில்கள், புகா் மின்சார ரயில்களை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டுமென கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதியே மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

மின்சார ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது பொது மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பதுடன், பொருளாதார நிலையை விரைந்து மீட்டெடுக்கவும் வசதியாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மின்சார ரயில் சேவைகளைத் தொடங்க தெற்கு ரயில்வேக்கு உரிய உத்தரவுகளை தாங்கள் பிறப்பிக்க வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

அத்தியாவசியப் பணிகள்: அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு

வருகின்றன. ரயில்வே ஊழியா்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு உரிய அனுமதிச் சீட்டு மூலமாக மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை. இதனால், பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர தனியாா் வாகனங்களை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

அதிகளவு வாகனப் பயன்பாடு காரணமாக, சென்னையில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ரயில் சேவைகள் அதிகளவு இருந்த காலத்தில் அனைத்து இடங்களிலும் இத்தகைய கடுமையான போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com