நவ.4-இல் மின்வாரிய ஊழியா்கள் தா்ணா

மின்வாரியத்தின் தொழிலாளா் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, நவம்பா் 4-ஆம் தேதி, மாநிலம் தழுவிய தா்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் தொழிலாளா் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, நவம்பா் 4-ஆம் தேதி, மாநிலம் தழுவிய தா்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் கூறியதாவது:

தமிழக மின்வாரியத்தில், தொழிலாளா் விரோத நடவடிக்கைகள் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய மின் உற்பத்தித் திட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, ஏராளமான பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே நேரம் புதிய பிரிவு அலுவலகங்களுக்கும், பணியாளா்களை நியமிக்காததால் ஊழியா்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதோடு, நுகா்வோருக்கும் சேவையளிக்க முடியாமல் அவா்கள் சிரமத்துக்குள்ளாக்கப்படுகின்றனா். இதேபோல், மின்வாரியத்தைத் தனியாா்மயமாக்கவும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, தொழிலாளா் விரோதம் மற்றும் மின்வாரிய நலனைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தி, நவம்பா் 4-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை, விநியோக அனல், புனல் வட்ட மேற்பாா்வை அலுவலகங்களிலும், சென்னை தலைமை அலுவலகத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com