குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 74வது காலாட்படை தினம்

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் (எம் ஆர் சி ) 74வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.
குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 74வது காலாட்படை தினம்

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் (எம்ஆர்சி) 74வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.

கடந்த 1947ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி  முதல் காலாட் படையினர் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு எதிரிகளிடம் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர்.  

காலாட்படையின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக காலாட்படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், இன்று காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. 

தொடர்ந்து,  போரில் உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு காலாட்படை தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.வி.கே.மோகன், ராணுவ மைய கமாடண்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்  சிங், ஓய்வு பெற்ற பிரிகேடியர் அஜித் சிங், மூத்த காலாட்படை வீரர்கள், கலந்துகொண்டு ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com