சங்ககிரியில் கட்டப்படும் புதிய எரிதகன மேடைக்கு அடிக்கல் நாட்டல்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் முதன்முறையாக பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் புதிய எரிதகன மேடை கட்டப்பட உள்ளன. அதற்கான பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  
புதிதாக கட்டப்படவுள்ள எரிதகன மேடைக்கு சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
புதிதாக கட்டப்படவுள்ள எரிதகன மேடைக்கு சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.


சேலம் மாவட்டம், சங்ககிரியில் முதன்முறையாக பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட லஷ்சுமி தீர்த்தம் அருகே முக்கால் ஏக்கர் பரப்பளவில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய எரிதகன மேடை கட்டப்பட உள்ளன. அதற்கான பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  

சங்ககிரி, அக்கமாபேட்டை முருக சந்திரா எஜூகேசனல் மற்றும் சோசியல் பவுண்டேசன் டிரஸ்ட் , எடப்பாடி ஸ்வலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ்,  சங்ககிரி   லாரி உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பொது நல அமைப்புகள் இணைந்து  பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சுமார் முக்கால் ஏக்கர் பரப்பளவில்  சுமார் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் எரிவாயுவை பயன்படுத்தி சடலங்களை எரியூட்டுவது, ஈமக்காரியங்கள் செய்வதற்கு தனி இடம், குளியல், கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சடலங்களை எடுத்து வருவதற்கு ஆம்புலன்ஸ் வாகன வசதி,  தகன மயானத்தில் கண்காணிப்பு கேமரா, ஜெனரட்டர் வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைச் செய்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். அதனையடுத்து  இப்பணிகளுக்கு சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா பூமிபூஜை செய்து அடிக்கல்நாட்டி தொடக்கி வைத்தார்.

சங்ககிரி நகரக் கூட்டுறவு வங்கித்தலைவரும், அதிமுக ஒன்றிய செயலருமான என்சிஆர்.ரத்தினம்,  அதிமுக நிர்வாகி மருதாசலம்,  கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சி.செல்வம், முருக சந்திரா எஜூகேசனல் மற்றும் சோசியல் பவுண்டேசன் டிரஸ்ட் தலைவர் சிவா பரமசிவம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வி.செல்வராஜ், செயலர் கே.கே.நடேசன், பொருளாளர் என்.மோகன்குமார், இணைச் செயலர் எம்.சின்னதம்பி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏ.வெங்கடேஸ்வரகுப்தா, வெங்கடாசலம், தியாகராஜன், சங்ககிரி அரிமா சங்க செயலர் கார்த்திக், கோட்டை அரிமா சங்க செயலர் ரமேஷ், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் எ.ஆனந்தகுமார், செயலர் ஆர்.ராகவன், ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தலைவர் வேல்முருகன், நிர்வாகி எஸ்.அன்பழகன் உள்ளிட்ட  பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com