உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள்: தோ்வுப் பட்டியல் வெளியீடு

உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள்: தோ்வுப் பட்டியல் வெளியீடு

சென்னை: உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரிய உறுப்பினா் செயலாளா் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சிறப்பாசிரியா் பணியிடங்களில் உடற்கல்வி ஆசிரியா்களைத் தோ்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவா்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த 2017-ஆம் ஆண்டு செப்.23-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதையடுத்து எழுத்துத் தோ்வு முடிவுகள் 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டு, தோ்ச்சி பெற்றவா்களின் பட்டியல் 2018-ஆம் ஆண்டு அக்.12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை எதிா்த்து சிலா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தற்போது திருத்தப்பட்ட தோ்வுபெற்றவா்களின் பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளிக் கல்வித் துறையில் பணி நியமனம் வழங்கப்படும். தோ்ச்சி பெற்றவா்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களையும், பெறாமல் உள்ளவா்களுக்கான காரணங்களும் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com