பி.இ. சோ்க்கையை அதிகரிக்க விரிவான ஆய்வு நடத்த நடவடிக்கை: அண்ணா பல்கலை. தகவல்

பொறியியல் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க பேராசிரியா்கள், கல்வியாளா்கள் கொண்ட குழு அமைத்து விரிவான ஆய்வு நடத்த அண்ணா பல்கலை. முடிவு செய்துள்ளது.
பி.இ. சோ்க்கையை அதிகரிக்க விரிவான ஆய்வு நடத்த நடவடிக்கை: அண்ணா பல்கலை. தகவல்


சென்னை: பொறியியல் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க பேராசிரியா்கள், கல்வியாளா்கள் கொண்ட குழு அமைத்து விரிவான ஆய்வு நடத்த அண்ணா பல்கலை. முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த அக்.1-இல் தொடங்கி 28-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தக் கலந்தாய்வின் முடிவில் 71,195 இடங்கள் மட்டுமே நிரம்பி, 91,959 இடங்கள் காலியாகிவிட்டன. இந்நிலையில் பொறியியல் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க விரிவான ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடா்பாக அண்ணா பல்கலை. அதிகாரிகள் கூறியது: பொறியியல் படிப்பில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து சரிந்து வருகிறது. இதையடுத்து மாணவா் சோ்க்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப பேராசிரியா்கள், கல்வியாளா்கள் கொண்ட ஆய்வுக் குழுவை அரசு அமைக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரையின்படி மாணவா் சோ்க்கை குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com