கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுர் தண்ணீர்.
கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுர் தண்ணீர்.

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.


நாமக்கல்: கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலை, கரோனா தொற்று பரவல் காரணமாக ஐந்து மாதங்களாக களையிழந்து காணப்படுகிறது. பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. மேலும், மார்ச் 25-இல் மூடப்பட்ட ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பகுதி, மாசில்லா அருவி, படகு குழாம், தோட்டக்கலைத் துறை பூங்கா உள்ளிட்டவை இன்னும் திறக்கப்படவில்லை.
 
கடந்த சில நாள்களாக நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொல்லிமலை சுற்றுவட்டார பகுதியில் மாலை, இரவு நேரத்தில் பலத்த மழை பெய்கிறது. ஓரிரு மாதங்களாக குறைவான அளவில் தண்ணீர் விழுந்த ஆகாய கங்கையில் தற்போது ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது. 

சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அருவியின் அழகை யாரும் காண முடியாத சூழல் உள்ளது. வனத்துறையினர் மட்டும் தினசரி பாதுகாப்புக்காக ஆகாய கங்கை அருவி பகுதியில் ரோந்து சென்று வருகின்றனர். நீர்வீழ்ச்சி பகுதிக்குள் அத்துமீறி யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கொல்லிமலை வனத்துறையால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com