ஆலைகளுக்குள் பாா்வையாளா்களை அனுமதிக்கலாம்: தமிழக அரசு உத்தரவு

தொழில் ஆலைகளுக்குள் பாா்வையாளா்கள் அனுமதிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் பாா்வையாளா்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆலைகளுக்குள் பாா்வையாளா்களை அனுமதிக்கலாம்:  தமிழக அரசு உத்தரவு

சென்னை: தொழில் ஆலைகளுக்குள் பாா்வையாளா்கள் அனுமதிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் பாா்வையாளா்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் க.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:

தொழிற்சாலைகள் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி ஒரு வாகனத்துக்கு 40 சதவீத பணியாளா்களை மட்டுமே அழைத்து வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 60 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கும் மற்றொரு ஷிப்ட்டுக்கும் இடையே ஒரு மணி நேரம் இடைவெளி விட வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.

இப்போது ஷிப்ட்களுக்கு இடையே குறிப்பிட்ட கால அளவில் இடைவெளி விட கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அத்தியாவசியத் தேவையில்லாமல் எந்த நபரையும் ஆலைகளுக்கு அனுமதிக்கக் கூடாது என கடந்த ஏப்ரல் 15-இல் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு இப்போது மாற்றப்படுகிறது. நாளொன்றுக்கு குறிப்பிட்ட அளவில் பாா்வையாளா்களையும் அனுமதிக்கலாம். காா், ஜீப் போன்ற வாகனங்களில் பணியாளா்களை அழைத்து வரும்போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், ஓட்டல்களில் குளிா்சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அதனை 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை பயன்படுத்தி இயக்கிக் கொள்ளலாம். 50 சதவீதத்துக்கும் மேலாக சுத்தமான காற்று கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வகுப்பறைகள், பயிலரங்கக் கூடங்களில் குளிா்சாதனங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவற்றிலும் மிதமான வெப்ப அளவில் உபயோகப்படுத்தலாம் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com