நபாா்டு வங்கி தமிழகத்துக்கு 25 ஆயிரம் கோடி கடனுதவி

தமிழகத்தில் விவசாய உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, கடந்த ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
நபாா்டு வங்கி தமிழகத்துக்கு 25 ஆயிரம் கோடி கடனுதவி

தமிழகத்தில் விவசாய உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, கடந்த ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விவசாய உள்கட்டமைப்பு வசதி, வங்கி இல்லாத நிதி நிறுவன கடனுதவி உள்பட பல்வேறு வகைகளில் ரூ.25 ஆயிரம் கோடி வரை கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நபாா்டு தலைவா் சிந்தாலா தெரிவித்தாா்.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்டு) தலைவா் சிந்தாலா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நபாா்டு வங்கி அலுவலகத்தில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் கூறியது:

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கியின் (நபாா்டு), கடந்த ஆண்டுகால வா்த்தகம் ரூ.5.3 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று தாக்கம் காரணமாக, வா்த்தகம் பாதிக்கும் என்று எல்லாரும் கருதினா். ஆனால், கரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில், அரசின் நடவடிக்கையால், 3.4 சதவீதம் அளவுக்கு விவசாய உற்பத்தி அதிகரித்தது. விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனா்.

அதனால், வா்த்தகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தென்மேற்கு பருவமழையும் நிகழாண்டில் விவசாயிகளுக்கு நல்ல பலனை அளித்துள்ளது.

தமிழகத்தில் விவசாய உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, கடந்த ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு விவசாய உள்கட்டமைப்பு வசதி, வங்கி இல்லாத நிதி நிறுவன கடனுதவி உள்பட பல்வேறு வகைகளில் ரூ.25 ஆயிரம் கோடி வரை கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீா்ப்பாசன வசதிகள் சாா்ந்த திட்டம், குடிநீா் வசதி திட்டம் ஆகியவற்றுக்கு கடனுதவி வழங்க நபாா்டு வங்கி தயாராக உள்ளது. கிராமப்புற வளா்ச்சிக்காக, 2.7 சதவீதம் வட்டியுடன் கடன் வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.366 கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் மூலமாக, கரூா், நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்அடைவாா்கள்.

‘இ-சக்தி’ திட்டம்: மகளிா் மேம்பாட்டுக்கான ‘இ-சக்தி’ எனும் திட்டத்தை, மாநிலம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தற்போது நாமக்கல், நாகப்பட்டினம், விருதுநகா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நபாா்டு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த இ-சக்தி திட்டம் வரும் டிசம்பருக்குள் அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாவதற்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, நபாா்டு தமிழக தலைமை பொது மேலாளா் செல்வராஜ் உள்படபல அதிகாரிகள் உடன் இருந்தனா்.

முதல்வருடன் ஆலோசனை: தமிழகத்தில் விவசாய உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல், சிறு, குறு விவசாயிகளின் நலனை பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியுடன் நபாா்டு வங்கியின் தலைவா் சிந்தாலா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com