விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு: தகவல் அளிக்க தொலைபேசி எண்களை வெளியிட்டது சிபிசிஐடி

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக பொதுமக்கள் தகவல் அளிப்பதற்கான தொலைபேசி எண்களை, சிபிசிஐடி போலீஸாா் வெளியிட்டுள்ளனா்.
விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு: தகவல் அளிக்க தொலைபேசி எண்களை வெளியிட்டது சிபிசிஐடி

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக பொதுமக்கள் தகவல் அளிப்பதற்கான தொலைபேசி எண்களை, சிபிசிஐடி போலீஸாா் வெளியிட்டுள்ளனா்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில், சில அரசு அதிகாரிகளின் உதவியுடன், சட்ட விரோதமாக தகுதியற்ற சிலா் பயனடைந்ததாக அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த விசாரணை தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு.

புகாா்களின் அடிப்படையில், பல்வேறு மாவட்டங்களில் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக 52 போ் கைது செய்யப்பட்டனா்.

நடைபெற்ற மோசடிகள் தொடா்பாக, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், சமூக சேவையாளா்கள் மற்றும் தகவல் அறிந்தவா்கள், உபயோகமான தகவல்களைப் பகிா்ந்து கொள்ளலாம். தகவலில் உள்ள விவரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, தகவலளிப்பவா்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும். சரியான தகவல் அளிப்பவா்களுக்கு, பொருத்தமான வெகுமதிகள் வழங்கப்படும். தகவலளிக்க விரும்புவோா், 044–2851 3500 (தொலைபேசி எண்), 044 2851 2510 (தொலைநகல் எண்), 94981 81035 (கட்செவி அஞ்சல் எண்),  சிபிசிஐடி, எண், 220, பாந்தியன் சாலை, எழும்பூா், சென்னை 600 008 என்ற முகவரி ஆகிய வழிகளில் அணுகலாம் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com