ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருமலைக்கு புறப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதி ஏழுமலையான் அணிந்துகொள்ள திங்கள்கிழமை புறப்பட்டு சென்றது.
பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட மாலையை அணிந்து காட்சி தரும் ஸ்ரீ ஆண்டாள்
பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட மாலையை அணிந்து காட்சி தரும் ஸ்ரீ ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதி ஏழுமலையான் அணிந்துகொள்ள திங்கள்கிழமை புறப்பட்டு சென்றது.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் ஐந்தாம் திருநாளில் சீனிவாச பெருமாள் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம், அந்த வகையில் தற்போது பிரமோற்சவ விழா நடைபெற்று வருவதால் மூன்றாம் நாளான நேற்று மாலை கொண்டு செல்லும் வைபவ நிகழ்ச்சி ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.

கோவிலிலிருந்து திருப்பதிக்குப் புறப்பட்ட மாலை
கோவிலிலிருந்து திருப்பதிக்குப் புறப்பட்ட மாலை

இதற்காக ஆண்டாளுக்கு பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது, பின்னர் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. இதன் பின்னர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் கிளி, ஆண்டாள் அணிந்திருந்த வஸ்திரம் ஆகியவை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக மாட வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பின்னர் புறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் ஊழியர்கள் பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com