மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான அரசின் உதவிகளுக்கு தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான அரசின் உதவிகளுக்கு தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் தாக்கல் செய்த மனுவில், இந்திய மருத்துவத் துறையை உலகத்தரத்துக்கு முன்னேற்றும் வகையில்  மேற்கொள்ளப்படும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் வங்கிகளின் கடுமையான நடைமுறைகள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியாமல் போவதற்கு காரணமாக அமைகின்றன. 

இந்த விவகாரத்தைப் பிரதமரின் ஆலோசனைப்படி,  நிதி ஆயோக்கின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விவாதித்த நிதி ஆயோக், அரசு அமைப்புகளுக்கு பல்வேறு பரிந்துரைகள் அனுப்பியுள்ளது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு எதிர்காலத்தில் இளம் விஞ்ஞானிகள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ளாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில், இந்த வழக்கில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளதால், மனு குறித்துப் பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்  என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ள பிரதமர் அலுவலக செயலரின் பெயரை நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கிலிருந்து  பிரதமர் அலுவலக செயலாளரின் பெயரை நீக்கி, மனு தொடர்பாக,  மத்திய மாநில அரசுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நிதி ஆயோக் பதிலளிக்க  வரும் அக்டோபர் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com