திருச்சியில் கே.என்.ராமஜெயம் பிறந்தநாள் விழா

திமுக முன்னாள் அமைச்சரும், முதன்மைச் செயலருமான கே.என். நேருவின் தம்பி, கே.என். ராமஜெயத்தின் 59ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கே.என்.ராமஜெயம் பிறந்தநாள்
கே.என்.ராமஜெயம் பிறந்தநாள்

திமுக முன்னாள் அமைச்சரும், முதன்மைச் செயலருமான கே.என்.நேருவின் தம்பி, கே.என். ராமஜெயத்தின் 59ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சி-மணப்பாறை சாலையில் உள்ள கேர் கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் அமைந்துள்ள கே.என். ராமஜெயத்தின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

எம்எல்ஏ-க்கள் செளந்தரபாண்டியன், மூர்த்தி, ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலர் தியாகராஜன், மாநகரச் செயலர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்பட அக் கட்சியினர் பலரும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கேர் கல்லூரிக்கு வந்து கே.என். ராமஜெயத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும், சிலையின் பீடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த கே.என்.ராமஜெயத்தின் உருவப்படத்துக்கும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com