கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் 9 ஆயிரத்தைத் தாண்டியது பலி: 5 லட்சத்தைத் தாண்டியது குணம்

தமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,325 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,57,999 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 980 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் 63 பேர் (அரசு மருத்துவமனை- 36, தனியார் மருத்துவமனை- 27) பலியானதாக இன்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,010 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 5,363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,02,740 பேர் குணமடைந்துள்ளனர். 46,249 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 84,979 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 67,25,037 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 111 என மொத்தம் 177 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com