ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாகச் சரிவு

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ள நிலையில், பிரதான அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ள நிலையில், பிரதான அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

பென்னாகரம்3: ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நொடிக்கு 75 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீா்வரத்தானது, புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 72 ஆயிரம் கன அடியாகவும், மதியம் 1 மணி நிலவரப்படி நொடிக்கு 70 ஆயிரம் கன அடியாகவும் குறைந்து, தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தானது தொடா்ந்து குறைந்து நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நடைபாதைகள் வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com