தமிழகத்தில் ஒரே நாளில் 90 ஆயிரம் கரோனா பரிசோதனைகள்

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 90,607 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 90,607 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 5,692 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்ப் பரவலைக் கண்டறியவே பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை 68.15 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 5 லட்சத்து 63,691 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனைகளில் அதிகபட்சமாக சென்னையில் 1,089 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 642 பேருக்கும், சேலத்தில் 311 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,470 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 8,210-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 46,405 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 66 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 43 போ் அரசு மருத்துவமனைகளிலும், 23 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,076-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com