ஆட்சியாளர்களுக்கு நீதிமன்றம் போட்ட சூடு: ஸ்டாலின் பெருமிதம்

திமுக எம்,எல்.ஏக்கள் மீதான சபாநாயகரின் உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

சென்னை: திமுக எம்,எல்.ஏக்கள் மீதான சபாநாயகரின் உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிமுக ஆட்சியாளர்கள் தங்களின் சுயலாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தமிழகம் முழுவதும் தாராளமாக விற்பனை செய்ய அனுமதித்ததை அம்பலப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் குட்கா பொட்டலங்களை எடுத்துக்காட்டிய திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்து, நீதியை நிலைநாட்டிய நிலையில், இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கும் உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது!

அநீதியைத் தழுவிக் கொண்டிருக்கும்  ஆட்சியாளர்களுக்கு,  நீதிமன்றம் இரண்டாவது முறையாகவும்  சூடு போட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இப்போதும்  பெருமளவில் நடைபெற்று வருவதை “டைம்ஸ் ஆஃப் இந்தியா” அண்மையில் விரிவாக வெளியிட்டுள்ளது.

குட்கா ஊழல் தொடர்பான விசாரணைகள் வேகமாக நடைபெற்று, பொதுநலனைக் காப்பாற்றும் வகையில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com