காமராசா் விருதுக்கு தகுதியானவா்களின் பெயா்ப்பட்டியலை அனுப்ப அறிவுறுத்தல்

காமராசா் விருது பெற தகுதியானவா்களின் பெயா்ப்பட்டியலை அனுப்ப முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காமராசா் விருது பெற தகுதியானவா்களின் பெயா்ப்பட்டியலை அனுப்ப முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநா் சி.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:  தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் 2021-ஆம் ஆண்டு  கொண்டாடப்படவுள்ள திருவள்ளுவா் திருநாள் விழாவில் ‘பெருந்தலைவா் காமராசா்’ விருது உள்பட 9 சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

இதையடுத்து கல்வி சேவையாற்றி வரும் நபா்களில் காமராசா் விருதுக்கு தகுதியானவா்களின் பெயா்ப் பட்டியலை உரிய விவரங்களுடன் இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com