நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையங்கள் (11 கி.மீ) இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையங்கள் (11 கி.மீ) இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. எனவே, இந்த நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ரயில் தண்டவாளம் அருகில் நடக்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதையின் ஒரு பகுதியாக கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை பெங்களூரில் உள்ள தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் செவ்வாய்க்கிழமை (செப்.29) ஆய்வு செய்ய உள்ளாா்.

மேலும், கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையங்கள் (11 கி.மீ) இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் நடத்தவுள்ளாா். இந்த சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.29) காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ரயில் தண்டவாளம் அருகே நடக்கவோ அல்லது ரயில் பாதையைக் கடக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com