போடியில் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

போடி, தேவாரத்தில் திங்கள்கிழமை, வேளாண்மை சட்டத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போடியில் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
போடியில் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

போடி, தேவாரத்தில் திங்கள்கிழமை, வேளாண்மை சட்டத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண்மை சட்டம் விவசாயிகளை பாதிக்கும் என்றும், விவசாயம் அழிந்துவிடும் என்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போடியில் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் போடி தேவர் சிலை திடலில் நடைபெற்றது.

போடி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தி.மு.க. ஒன்றிய செயலருமான எஸ்.லட்சுமணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் மா.வீ.செல்வராஜ், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் முசாக் மந்திரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலர் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் முருகேசன், ம.தி.மு.க. நகர செயலர் ஆரோ செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், புதிய சட்டங்களுக்கு ஆதரவளித்த அ.தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். தேவாரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தேவாரம் நகர தி.மு.க. செயலாளர் பால்பாண்டி, ஏ.ஐ.சி.டி.யு மாவட்ட செயலாளர் வீ.பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com