சிதம்பரம் அருகே விவசாயியை முதலை இழுத்துச் சென்றது: மக்கள் சாலை மறியல்

சிதம்பரம் அருகே விவசாயியை முதலை இழுத்துச் சென்றால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கொட்டும் மழையில் கிராம மக்கள் சாலை மறியல்
கொட்டும் மழையில் கிராம மக்கள் சாலை மறியல்


சிதம்பரம் அருகே விவசாயியை முதலை இழுத்துச் சென்றால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த வேளக்குடி பகுதியில் பழைய நல்லூர் கிராமத்தில் விவசாயி  முனுசாமி என்கின்ற அறிவானந்தம் வயது 55.  செவ்வாய்க்கிழமை இரவு விவசாயப் பணிகள் முடித்து வாய்க்காலில் கால் கழுவும்போது முதலை கடித்து இழுத்துச் செல்லப்பட்டார். 

சிதம்பரம் தீயணைப்பு மற்றும் சிதம்பரம் காவல்துறையினர், கிராம மக்கள் உதவியுடன் உடலை தேடி வருகின்றனர்.

உடல் மீட்கும் பணியின்போது கடுமையான மழை பெய்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டு அடுத்து சிதம்பரம் மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடங்களுக்கு மேலாக வேளக்குடி மற்றும் அகரநல்லூர் மற்றும் பழையநல்லூர் கிராம மக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் பொதுமக்களிடம் உறுதி அளித்ததன் பேரில் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com