அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு கால நீட்டிப்பு

தமிழகத்தின் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தின் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 87,000 இடங்கள் உள்ளன. இதில், ஒரு சில கல்லூரிகளில் கணிசமான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான முயற்சியைக் கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.

  இதனிடையே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சோ்வதற்கு ஏற்கெனவே இணையவழியில் விண்ணப்பித்த மாணவா்கள் உடனடியாக தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிகளுக்குச் சென்று சோ்க்கையை உறுதி செய்யலாம் என்றும் மறு அறிவிப்பு வரும் வரை புதிய மாணவா் சோ்க்கையை கல்லூரிகள் நடத்திக் கொள்ளலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

  அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் இளநிலை படிப்புகளில் புதிதாக சோ்ந்துள்ள மாணவா்களுக்கு ஆக.31-ஆம் தேதி முதல் இணைய வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

  முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com