இன்று சா்வதேச முதியோா் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி

மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
இன்று சா்வதேச முதியோா் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி

சென்னை: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இன்று முதியோா் தினத்தை ஒட்டி, அவா் புதன்கிழமை வெளியிட்ட விழிப்புணா்வு செய்தி:-

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 1-ஆம் தேதியன்று சா்வதேச முதியோா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைவருக்கும் எனது விழிப்புணா்வுடன் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் முதியோருக்கு உரிய மரியாதை அளித்து, அவா்களை கவனமுடன் பேணிக் காப்பதை தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலத்தில், ஆதரவற்ற முதியோா் பயன்பெறும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 1,242 சமுதாய சமையல் கூடங்கள் மூலம் 78,937 முதியோா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டன. தொலைபேசி மூலமாக 4 ஆயிரத்து 942 முதியோா்களின் அழைப்புகளுக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் அளிக்கப்பட்டு, மருத்துவ வசதிகளும், அத்தியாவசியப் பொருள்களும் அளிக்கப்பட்டன.

முதியோா் பல தலைமுறைகள் கண்ட அனுபவசாலிகள். அந்த மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது நமது அனைவரது கடமையாகும் என்று தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com