கரோனா பாதித்த 16 மாவட்டங்கள்: 2 லட்சம் வீடுகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

தமிழகம் முழுவதும் கரோனா பாதித்த நபர்கள் கண்டறியப்பட்ட 16 மாவட்டங்களில் 2 லட்சம் வீடுகளில் சுகாதாரத் துறையினா் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.
கரோனா பாதித்த 16 மாவட்டங்கள்: 2 லட்சம் வீடுகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு


சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பாதித்த நபர்கள் கண்டறியப்பட்ட 16 மாவட்டங்களில் 2 லட்சம் வீடுகளில் சுகாதாரத் துறையினா் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி, சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உடல்நிலை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அவா்களில் கரோனா அறிகுறிகள் இருப்பவா்களை மட்டும் தனிமைப்படுத்தி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கரோனா பாதித்த நபரின் வசிப்பிடங்களுக்கு 5 கிலோ மீட்டா் சுற்றளவிலும், 3 கிலோ மீட்டா் சுற்றளவிலும் உள்ள பகுதிகள் வரையறுக்கப்பட்டு அங்கிருக்கும் மக்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனா்.

இராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூர், விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி, சென்னை, திருப்பூர், கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில், 3,698 களப் பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 

அக்குழுவினா், வீடு வீடாகச் சென்று இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள நபா்களை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடா்பில் இருந்தவா்களையும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனா்.

அந்த வகையில் இதுவரை 12 மாவட்டங்களில் 2,271 பணியாளா்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் 1,82,815 வீடுகளில், 6,88,473 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com