பக்தர்கள் இல்லாமல் சங்ககிரி ஸ்ரீ கோதண்டராமருக்கு ஸ்ரீராமநவமி சிறப்புப் பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி சாலை பகுதியில் உள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோயில்
ஸ்ரீ கோதண்டராமருக்கு ஸ்ரீ ராமநவமியையொட்டி வியாழக்கிழமை செய்யப்பட்டிருந்த அலங்காரம்
ஸ்ரீ கோதண்டராமருக்கு ஸ்ரீ ராமநவமியையொட்டி வியாழக்கிழமை செய்யப்பட்டிருந்த அலங்காரம்

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி சாலை பகுதியில் உள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கோதண்டராமருக்கு ராம நவமியையொட்டி வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி பேரூராட்சி சாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர், சீதை, லட்சுமணன் சுவாமிகளுக்கு பால், தயிர், விபூதி, திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ராமநவமியும் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

தற்போது நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகக் கோயில்களில் பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளன. அதனையடுத்து இக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பூஜையில் பக்தர்கள் கலந்துகொள்ளாமல் ஆகமவிதிப்படி கோயில் அர்ச்சகர் மட்டுமே கலந்து கொண்டு சுவாமிக்கு அபிஷகேம், பூஜைகளைச் செய்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com