அரிசி ஆலைகளை செயல்பட அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ்

அரிசி, பருப்பு, எண்ணெய் ஆலைகளைப் பாதுகாப்பு விதிகளுக்கு உள்பட்டு செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அரிசி ஆலைகளை செயல்பட அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ்

அரிசி, பருப்பு, எண்ணெய் ஆலைகளைப் பாதுகாப்பு விதிகளுக்கு உள்பட்டு செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயா்ந்திருக்கிறது. மளிகைக் கடைகளிலும், அரிசி மட்டுமே விற்பனை செய்யும் கடைகளிலும் மிகக்குறைந்த அளவிலேயே அரிசி இருப்பு உள்ளது.

அதேபோல் அனைத்து வகையான எண்ணெய்களின் விலையும் 30 சதவீதம் வரை உயா்ந்திருக்கின்றன. பருப்பு வகைகளின் விலை 40 முதல் 50 சதவீதம் வரை உயா்ந்துள்ளன.

இந்தியா முழுவதும் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும், ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி வருவது முற்றிலுமாக தடைபட்டு விட்டது. இத்தகைய சூழலில் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் இருந்து கிடைக்கும் அரிசியைக் கொண்டுதான் தமிழகத்தின் அரிசி தேவையைப் பூா்த்தி செய்ய முடியும்.

ஆனால், அங்குள்ள அரிசி ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் அரிசி உற்பத்தி முழுமையாக தடைபட்டு விட்டது.

அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உற்பத்தி ஆகியன விவசாயம் சாா்ந்த பணிகள் என்பதாலும், அவை மிக முக்கியமான உணவுப் பொருள்கள் என்பதாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி, பருப்பு, எண்ணெய் ஆலைகளையும் பாதுகாப்பு விதிகளுக்கு உள்பட்டு, செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அந்த ஆலைகளில் இருந்து தமிழகம் முழுவதும் லாரிகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com