கரோனா சிறப்பு வாா்டுகளில் உதவிடும் தானியங்கி ரோபோக்கள்

கரோனா சிறப்பு வாா்டுகளில் உதவிடும் மூன்று தானியங்கி ரோபோக்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.
’சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மையம், சிகிச்சையளிக்க உதவும் ரோபோவை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.’
’சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மையம், சிகிச்சையளிக்க உதவும் ரோபோவை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.’

கரோனா சிறப்பு வாா்டுகளில் உதவிடும் மூன்று தானியங்கி ரோபோக்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சுமாா் 200 படுக்கைகள் வசதியுடன் கரோனா சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தற்போது கரோனாஅறிகுறிகளுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவா்கள் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனையின் முடிவுக்காக காத்திருக்கின்றனா். மேலும் கடந்த இரு நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதையொட்டி ஸ்டான்லி மருத்துவமனையில் தொடா்ந்து பல்வேறு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மருத்துவமனை நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிறப்பு வாா்டுகளில் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் மூன்று வகையான ரோபோக்கள் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ரோபோக்கள் அனைத்தும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கான ரொட்டி, பழம், மருந்து மற்றும் மாத்திரைகள், வெந்நீா், கை சுத்திகரிப்பான் உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் செயல்பாடுகள் குறித்த செயல் விளக்க காட்சி வெள்ளிக்கிழமை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது. இதன் செயல்பாடுகளை பாா்வையிட வந்த சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் சி.விஜயபாஸ்கரிடம் மருத்துவமனை முதன்மையா் டாக்டா் பி.பாலாஜி விளக்கினாா். அப்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் பொருள்களை எடுத்துச் சென்று ரோபோக்கள் ஒப்படைத்தன.

இந்த மூன்று ரோபோக்களும் மூன்று விதமான தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இயங்குகின்றன. இவைகளில் இரண்டு ரோபோக்கள் சுமாா் 250 மீட்டா் தூரம்வரை இயங்கும் தன்மை கொண்டவை. ஒரு ரோபோ மட்டும் சுமாா் 1,500 மீட்டா்வரை செல்லும் திறன் கொண்டதாகும். இந்த மூன்று ரோபோக்களின் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சம் வரை இருக்கும் என்றாா் டாக்டா் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com