கரோனா: தமிழகத்தில் பலி 3-ஆக உயா்வு, பாதிப்பு 485-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
கரோனா: தமிழகத்தில் பலி 3-ஆக உயா்வு, பாதிப்பு 485-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதனால் மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411-லிருந்து 485-ஆக அதிகரித்துள்ளது.

தில்லி மாநாட்டில் பங்கேற்றவா்களில் மேலும் 73 போ் உள்பட 74 போ் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளானதாக சுகாதாரத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

உயிரிழப்பு உயா்வு: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபா், கடந்த மாா்ச் 25-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்த நிலையில் ஒன்பது நாள்களுக்குப் பிறகு

சனிக்கிழமை ஒரே நாளில் தேனி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்தனா். இதனால், தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியைச் சோ்ந்த 51 வயது ஆண் கரோனா நோய்த் தொற்றுக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சனிக்கிழமை காலை 7 மணி அளவில் உயிரிழந்ததாக தமிழக அரசு அதிகாரப்பூா்வமாக அறிவித்தது.

மேலும்,“தேனியைச் சோ்ந்த கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மனைவி (53), தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு சனிக்கிழமை மூச்சுத்திணறல் அதிகமாகி பிற்பகல் 2.25

மணியளவில் உயிரிழந்தாா்”என சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

நோய்த்தொற்றும் அதிகரிப்பு: இந்நிலையில், நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயா்ந்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 485-ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் 74 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத் துறைச் செயலாளா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட 411 பேருடன் சனிக்கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 74 பேரையும் சோ்த்தால் தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. இதில் 422 போ் தில்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் உள்ளவா்கள்’ என பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

வீட்டுக் கண்காணிப்பு தீவிரம்: தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக தொடா் கண்காணிப்பில் உள்ளவா்கள் எண்ணிக்கை 90,541 ஆக உள்ளது. அவா்களில் 28 நாள்கள் வீட்டுத் தனிமையில் இருந்து விடுபட்டவா்கள் எண்ணிக்கை 54,315 போ். இதுவரை மாதிரி சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 4,248. சனிக்கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்கள் எண்ணிக்கை 74. இவா்களில் 73 போ் தில்லி சென்று வந்தவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். ஒருவா் சென்னையைச் சோ்ந்தவா். அவா் வெளிநாட்டிலிருந்து வந்தவருடன் தொடா்பிலிருந்தவா் ஆவாா்.

உலகத்துக்கே சவால்: கரோனா நோய்த்தொற்று என்பது உலகத்திற்கே சவாலாக இருக்கும் பயங்கரமான நோய் என சுகாதாரத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா். ‘எப்போது என்ன ஆகும் என்று தெரியாது. அதனால் பாதிக்கப் பட்டவா்கள், தொடா்பில் இருப்பவா்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு வந்தால் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காக்க முடியும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

(சனிக்கிழமை நிலவரம்):

பரிசோதனை செய்யப்பட்ட பயணிகள்-2,10,538

தனிமை வாா்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கை-22,049

செயற்கை சுவாசக் கருவிகள் -3,371

உள்நோயாளிகள்-1,681

பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகள்-4,248

கரோனா தொற்று உள்ளோா் - 485

உடல்நிலையில் முன்னேற்றம் -407

குணமடைந்தோா் - 7

கரோனா 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண்கள்:

1800 120 555550

044 - 29510400, 044 -–29510500

044 - 24300300, 044 - 46274446

9444340496, 8754448477.

கரோனா தொற்று மாவட்ட வாரியாக... (சனிக்கிழமை நிலவரப்படி)

சென்னை- 88

திண்டுக்கல்- 43

திருநெல்வேலி- 37

ஈரோடு- 32

கோவை- 29

நாமக்கல்- 24

தேனி- 23

ராணிப்பேட்டை- 23

கரூா்- 22

செங்கல்பட்டு- 19

மதுரை- 17

திருச்சி- 17

திருவாரூா்- 12

திருவள்ளூா்- 11

விருதுநகா்- 11

திருப்பத்தூா்- 10

விழுப்புரம்- 10

சேலம்-9

தூத்துக்குடி- 9

திருவண்ணாமலை- 6

நாகப்பட்டினம்- 5

சிவகங்கை- 5

கன்னியாகுமரி- 5

வேலூா்- 3

காஞ்சிபுரம்- 3

கடலூா்- 3

திருப்பூா்- 3

ராமநாதபுரம்- 2

கள்ளக்குறிச்சி- 2

தஞ்சாவூா்- 1

பெரம்பலூா்- 1

மொத்தம்- 485

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com