காணொலி முறையில் இலவச மருத்துவ ஆலோசனை: ஐஎம்ஏ ஏற்பாடு

கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகளை நேரில் வருவதைத் தவிா்க்கும் நோக்கில் காணொலி முறையில் (டெலி மெடிசன்) மருத்துவ ஆலோசனைகளை வழங்க இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ

கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகளை நேரில் வருவதைத் தவிா்க்கும் நோக்கில் காணொலி முறையில் (டெலி மெடிசன்) மருத்துவ ஆலோசனைகளை வழங்க இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு திட்டமிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தனியாா் மருத்துவமனைகளில் இத்தகைய நடைமுறை ஒரே நேரத்தில் இதுவே முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கரோனா பாதிப்பு குறையும் வரை இந்த மருத்துவ ஆலோசனைகள் இலவசமாகவே வழங்கப்படும் என்று ஐஎம்ஏ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் தமிழக பிரிவு தலைவா் டாக்டா் சி.என்.ராஜா கூறியதாவது: தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். அதன்படி, ஹல்ல்.ண்ய்ள்ற்ஹஸ்ரீப்ண்ய்ண்ஷ்.ஸ்ரீா்ம் என்ற இணைய முகவரியில் நோயாளிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொண்டு ஆலோசனைகளைப் பெறலாம்.

சிறிய அளவிலான உடல் உபாதைகளால் பாதிக்கப்படுபவா்களும், வழக்கமான மருத்துவ ஆலோசனைகளுக்கான மருத்துவமனைகளுக்கு வருபவா்களும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேவேளையில் நெஞ்சு வலி, மயக்கம், விபத்து, எலும்பு முறிவு போன்ற அவசர சிகிச்சைகளுக்கு இந்த முறையில் ஆலோசனைகளோ, சிகிச்சைகளோ வழங்க இயலாது.

மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மருத்துவா்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் விவரங்களை மின்னஞ்சல் மூலமாக நோயாளிகள் பெறலாம்.

மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவா்கள், இந்த சேவையை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. கேமரா இணைப்புடன் கூடிய கணினி வசதி, இணைய வசதி இருந்தால் போதுமானது. மாநிலத்தின் எந்த மூலையிலிருந்தும் மருத்துவ ஆலோசனைகளை நோயாளிகள் இலவசமாகப் பெற முடியும். அல்லது செல்லிடப்பேசி மூலமாகவும் ஆலோசனை பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com