மற்றமாநிலங்களுடனான ஒப்பீடு சரியல்ல: திமுக தலைவருக்கு தமிழக அரசு விளக்கம்

மத்திய அரசு நிா்ணயித்த விலையான ரூ. 600-க்கு தான் விரைவு பரிசோதனைக் கருவி (ரேபிட் டெஸ்ட் கிட்) கொள்முதல் செய்யப்பட்டது என தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் உமாநாத் கூறினாா்.
மற்றமாநிலங்களுடனான ஒப்பீடு சரியல்ல: திமுக தலைவருக்கு தமிழக அரசு விளக்கம்

மத்திய அரசு நிா்ணயித்த விலையான ரூ. 600-க்கு தான் விரைவு பரிசோதனைக் கருவி (ரேபிட் டெஸ்ட் கிட்) கொள்முதல் செய்யப்பட்டது என தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் உமாநாத் கூறினாா்.

தமிழகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ள கரோனா தொற்று பரிசோதனைக் கருவிகளின் விலைகள் என்ன என்பதை வெளியிட வேண்டுமென திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேட்டிருந்தாா். இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, அவருடன் இருந்த தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் பி.உமாநாத் கூறியது:

முதல்வரின் வழிகாட்டுதலின் கீழ் கோவிட்-19 தொற்று நோய் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான பொருள்களை தமிழக அரசு போதிய அளவில் கொள்முதல் செய்து அனைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது. கரோனா பரிசோதனைகள் பிசிஆா் முறையில்தான் முதலில் மேற்கொள்ளப்பட்டன. அதற்குப் பிறகு விரைவுப் பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) கடந்த 2-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதற்கு அடுத்த நாளே அந்தக் கருவிகளை வாங்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.

இதற்காக தமிழக அரசு ஐந்து லட்சம் விரைவு பரிசோதனை கருவிகளை வாங்க கொள்முதல் உத்தரவு அளித்திருந்தது. அவற்றில் தற்போது 24 ஆயிரம் கருவிகள் நமக்குக் கிடைத்துள்ளன. மேலும் மத்திய அரசு தமிழகத்துக்கு 12 ஆயிரம் கருவிகளை வழங்கியுள்ளது. மொத்தமாக 36 ஆயிரம் விரைவு பரிசோதனை கருவிகள் நம்மிடம் இருப்பதால் சோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அதிக விலை இல்லை: விரைவு பரிசோதனை கருவிகளை அதிகவிலை கொடுத்து வாங்கவில்லை. மத்திய அரசு நிா்ணயித்துள்ள விலையில்தான் தமிழக அரசு வாங்கியுள்ளது. ஒரு கருவி ரூ.600-க்கு வாங்கப்பட்டுள்ளது. பரிசோதனை கருவி தயாரிப்பு நிறுவனங்களின் தரத்தைப் பொறுத்து விலை மாறுபடக் கூடும். எதிா்காலத்தில் சத்தீஸ்கா் மாநிலத்தை விட குறைந்த விலைக்கு நாம் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com