சூலூரில் சாலைத் தடுப்பில் மோதிய சரக்கு லாரி

சூலூரில் புதன்கிழமை அதிகாலை கேரளாவை நோக்கிச் சென்ற லாரி சாலை தடுப்பில் மோதி
சூலூரில் சாலைத் தடுப்பில் மோதிய சரக்கு லாரி

சூலூரில் புதன்கிழமை அதிகாலை கேரளாவை நோக்கிச் சென்ற லாரி சாலைத் தடுப்பில் மோதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் விவசாயத்திற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல கால்நடை தீவனம் உள்ளிட்ட பொருட்களுக்குக் கூட இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை அதிகாலை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் சூலூரில் புதன்கிழமை அதிகாலை கனத்த மழை பெய்தது. ஒரு ஈரோட்டிலிருந்து கால்நடை தீவனம் ஏற்றிய ஒரு சரக்கு லாரி மலப்புரம் நோக்கி சூலூர் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மலப்புரத்தைச் சேர்ந்த சையது(45) என்பவர் ஓட்டி வந்தார். சூலூர் அருகே வந்த பொழுது பலத்த மழையில் சிக்கிய லாரி சாலை தடுப்பு துவங்கியது. தெரியாமல் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

சூலூரில் அண்மையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தது. இதனை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளைச் சரிவர அகற்றாமல் சாலைப் பணிகளைச் செய்ததால் கூடலூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சூலூர் அருகே சாலை மிகவும் குறுகலாக அமைந்துவிட்டது. இதற்கு சூலூர் சாலை விரிவாக்கக் குழுவினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இடையே சரிவர ஒத்துழைப்பு இல்லாததால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் சுணக்கம் ஏற்பட்டு சாலை மிகவும் குறுகலாக அமைந்துவிட்டது. 

மேலும் சாலையில் வைக்கப்பட்டுள்ள மத்திய சாலை தடுப்புகள் சில இடங்களில் வைத்தும்,  சில இடங்களில் சாலை தடுப்புகள் இல்லாமலும் உள்ளது. மேலும் சாலை தடுப்புகள் துவங்கும் இடத்தில் எவ்வித எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படவில்லை. பலத்த மழைக்கு இடையே வந்த  லாரி ஓட்டுநருக்குச் சாலை தடுப்புகள் துவங்கியது சரிவரத் தெரியாத காரணத்தினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இவ்வாறு இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.  இதுவரை மூன்று லாரிகள் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் உணர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com