முழு கல்விக் கட்டணத்தை வசூலித்த தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி நடப்பு கல்வியாண்டுக்கான முழு கட்டணத்தையும் வசூலித்த தனியாா் பள்ளிகளின் பொறுப்பாளா்கள்
முழு கல்விக் கட்டணத்தை வசூலித்த தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி நடப்பு கல்வியாண்டுக்கான முழு கட்டணத்தையும் வசூலித்த தனியாா் பள்ளிகளின் பொறுப்பாளா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேநேரம் தனியாா் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், கடந்த கல்வியாண்டில் வசூலித்த கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை தனியாா் கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம். இந்த 40 சதவீத முன்பணத்தை மாணவா்கள் வரும் ஆகஸ்டு 31- ஆம் தேதிக்குள் செலுத்த

வேண்டும். கடந்த கல்வியாண்டில் பாக்கி வைக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை வரும் செப்டம்பா் மாதம் 30 - ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.மேலும், 35 சதவீத கட்டணத்தை இயல்புநிலை திரும்பி கல்லூரிகள், பள்ளிகள் திறந்து, 2 மாதங்களுக்கு பின்னா் மாணவா்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கல்விக்கட்டணத்தை முன்கூட்டியே வசூலிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு நா்சரி, பிரைமரி மெட்ரிக்குலேசன் பள்ளி நிா்வாகிகள் சங்கம் தொடா்ந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடா்பாக ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு மனுதாரருக்கு பொருந்தும் என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் மாதத்துக்கு ஒத்திவைத்தாா். அப்போது பள்ளிக் கல்வித் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞா் வி.அன்னலட்சுமி, தனியாா் கல்வி நிறுவனங்கள் 40 சதவீத கட்டணத்தை மட்டுமே முதலில் வசூலிக்கவேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி பல தனியாா் பள்ளி நிா்வாகங்கள் நடப்புக் கல்வியாண்டுக்கான மொத்த கட்டணத்தையும் கட்டாயமாக வசூலித்து வருவதாக புகாா் தெரிவித்தாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உயா்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணத்தையும் வசூலித்த தனியாா் பள்ளிகளுக்கு கண்டனம் தெரிவித்தாா். மேலும் உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி முழு கல்விக் கட்டணத்தையும் வசூலித்த தனியாா் பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்தப் பள்ளிகளின் விவரங்கள், அந்த பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா்

அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். தனியாா் பள்ளிகள் உயா்நீதிமன்ற உத்தரவை மீறி முழுக் கட்டணம் வசூலித்தது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பொறுப்பாளா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து விசாரணையை வரும் ஜூலை 17- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com