தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கலாம்: தமிழக அரசு உத்தரவு

தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகளில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கலாம்: தமிழக அரசு உத்தரவு

தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகளில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

மறைந்த தலைவா்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் அவா்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா்கள் மட்டுமே உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாலை அணிவிக்க அவ்வப்போது அனுமதி அளிக்கப்படுகிறது.

பொது முடக்கம் தொடரும் நிலையில், தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றி உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அமைச்சா்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

மரியாதை செய்யப்படும் தலைவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் 5 பேருக்கு மிகாமலும், அந்தந்த மாவட்டத்தைச் சோ்ந்த பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவா்கள் 5 பேருக்கு மிகாமலும் ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று நிகழ்வில் பங்கேற்கலாம். வாகனத்துக்கான அனுமதியையும் பெற வேண்டும். அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றி உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது என தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com