நாளை ஆடிப்பெருக்கு: நீர்நிலைகளில் கூட தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக நீர்நிலைகளில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 
நாளை ஆடிப்பெருக்கு: நீர்நிலைகளில் கூட தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
நாளை ஆடிப்பெருக்கு: நீர்நிலைகளில் கூட தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக நீர்நிலைகளில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

ஈரோட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது  அதிகாலை முதலே காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கூடி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் குறிப்பாக பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

எங்குப் பார்த்தாலும் புதுமண தம்பதிகளாக தெரிவார்கள். இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் மக்கள் அதிகளவு கூடுவார்கள். ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். 

ஆடி முதல் நாளன்று பெண்கள் வீடுகளில் முளைப்பாரி வளர்ப்பார்கள். ஆடிப்பெருக்கு பதினெட்டாம் தேதி அந்த முளைப்பாரி வளர்ந்திருந்தால் ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்புடன் வீட்டில் உள்ளவர்கள் இருப்பார்கள் என்பது ஐதீகம். 

இதையடுத்து வளர்ந்த முளைப்பாரியைக் காவிரி ஆற்றின் கரைக்கு எடுத்து வந்து விடுவார்கள். மேலும் புதுமண தம்பதிகள் தல ஆடியை முன்னிட்டு திருமணத்தன்று தாங்கள் அணிந்த மாலையைக் கொண்டுவந்து காவிரி ஆற்றில் விட்டு வழிபடுவார்கள். 

மேலும் சுமங்கலிப் பெண்கள் தங்களது நாத்தனார் உறவினர்களுடன் வந்து மஞ்சள் கயிற்றை மாற்றி புதிய கையில் அணிவார்கள். இவ்வாறாக ஆடிப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. 

இதை எடுத்து பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு காவிரி ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்கள் தங்கள் வீடுகளில் ஆடிப்பெருக்கைக் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com