தமிழகத்தில் புதிதாக 5,875 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,875 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களில் மட்டும் உறுதி செய்யப்பட்டவர்கள் 5,811 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 64 பேர்.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,57,613 ஆக உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,065 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 98 பேர் (அரசு மருத்துவமனை -75, தனியார் மருத்துவமனை -23) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 4,132 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மட்டும் 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,96,483 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தமிழகத்தில் 56,998 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 60,344 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 27,79,062 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

59 அரசு ஆய்வகங்கள், 63 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 122 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com