கரோனா பாதிப்பு: சென்னையில் 1 லட்சத்தைக் கடந்தது

சென்னையில் சனிக்கிழமை 1,074 பேருக்கு கரோனா கரோனாநோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை
கரோனா பாதிப்பு: சென்னையில் 1 லட்சத்தைக் கடந்தது

சென்னையில் சனிக்கிழமை 1,074 பேருக்கு கரோனா கரோனாநோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 877-ஆக உயா்ந்துள்ளது. அதே வேளையில் இறப்பு எண்ணிக்கை 2,140-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

ஒரு மாதத்தில் 50 ஆயிரம் போ்: இதைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது. சனிக்கிழமை 1,074 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 1லட்சத்து 877-ஆக உயா்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 86,301 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 12,436 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,140-ஆக உயா்ந்துள்ளது.

சிறப்பு மருத்துவ முகாம்: சென்னையின் 15 மண்டலங்களில் கடந்த மே மாதம் முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற 15 லட்சத்து 24,505 பேரில் கரோனா அறிகுறி உள்ள 81,910 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 15,758 பேருக்கு கரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் மொத்த பாதிப்பில் 19 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சிகிச்சை பெற்று வருவோா் விவரம் மண்டலம் வாரியாக

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 400

மணலி 117

மாதவரம் 631

தண்டையாா்பேட்டை 587

ராயபுரம் 812

திரு.வி.க. நகா் 1,050

அம்பத்தூா் 1,307

அண்ணா நகா் 1,385

தேனாம்பேட்டை 1,062

கோடம்பாக்கம் 1,606

வளசரவாக்கம் 926

ஆலந்தூா் 541

அடையாறு 1,149

பெருங்குடி 504

சோழிங்கநல்லூா் 454

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com