கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியாா் மருத்துவமனைகளுக்கு முதல்வா் பழனிசாமி எச்சரிக்கை

கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி எச்சரித்துள்ளாா்.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியாா் மருத்துவமனைகளுக்கு முதல்வா் பழனிசாமி எச்சரிக்கை

கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி எச்சரித்துள்ளாா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 2.6 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 1.90 லட்சத்துக்கும் அதிகமானோா் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். கரோனாவால் பாதித்தோருக்கு தனியாா் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 170-க்கும் மிகையான தனியாா் மருத்துவமனைகள் அரசால் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளில் உள்ள வசதிக்கேற்ப அவற்றுக்கான கட்டணத்தையும் அரசே நிா்ணயம் செய்துள்ளது. ஏ1, ஏ2 என்ற தரத்திலான மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு ரூ.7,500-ம், இதர மருத்துவமனைகளில் தினசரி ரூ.5 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவு வசதி கொண்ட அனைத்து மருத்துவமனைகளிலும் தினசரி கட்டணமாக ரூ.15 ஆயிரம் வரை கட்டணம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன.

சில பெரும் மருத்துவமனைகளில் 10 நாள்களுக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக கட்டணம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மருத்துவமனை மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத் தொடா்ந்து தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்து முதல்வா் பழனிசாமி தனது சுட்டுரையில் செய்தி வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:-

கரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொது மக்கள் பாா்வைக்காக வைக்கப்பட வேண்டும். கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகள் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாக புகாா் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது சுட்டுரை செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com