உசிலம்பட்டி பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான 8 அடி உயர நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
500 ஆண்டுகள் பழமையான 8 அடி உயர நடுகல்
500 ஆண்டுகள் பழமையான 8 அடி உயர நடுகல்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான 8 அடி உயர நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரப் பகுதியான நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் 8 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது, புலிக்குத்தி நடுகல் என்றும், கடந்த காலத்தில் இந்த பகுதியில் புலிகள் வாழ்ந்து வந்தாகவும், அதை அடக்கி வேட்டையாடும் வீரா்களின் நினைவை போற்றும் வகையில், இதுபோன்ற நடுகல் வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், மற்ற அனைத்துப் பகுதிகளிலும் 2 அல்லது 3 அடி உயரத்தில் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது 8 அடி உயரம் கொண்ட பெரிய அளவிலானது என, தொல்லியல் ஆய்வாளா் காந்திராஜன் தெரிவித்துள்ளாா்.

மேலும், இப்பகுதியில் 4000 ஆண்டுகள் பழமைவாய்ந்த நுண் கற்கால கற்கள் மற்றும் இரும்பு கற்கால இரும்பு துகள்கள், வட்டக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எனவே, இப்பகுதியில் முழுமையான அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com