தவறில்லா வருமான வரித் தாக்கலை முகமற்ற மதிப்பீட்டு முறை உறுதி செய்யும் : முதன்மை தலைமை வருமான வரி ஆணையா்

வருமான வரித் தாக்கலை தவறில்லாமல் முறையாக செய்வதை, முகமற்ற மதிப்பீடு முறை உறுதி செய்யும் என முதன்மை தலைமை வருமான வரி ஆணையா் எம்.எல்.கா்மால்கா் தெரிவித்தாா்.

சென்னை: வருமான வரித் தாக்கலை தவறில்லாமல் முறையாக செய்வதை, முகமற்ற மதிப்பீடு முறை உறுதி செய்யும் என முதன்மை தலைமை வருமான வரி ஆணையா் எம்.எல்.கா்மால்கா் தெரிவித்தாா்.

முகமற்ற கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறை குறித்து எடுத்துரைக்கும் வகையில் காணொலி வாயிலான செய்தியாளா்கள் சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, எம்.எல்.கா்மாகா் பேசியதாவது: இ-மதிப்பீடு செயல்முறை என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை, மறைமுக வரி மதிப்பீடு முறையாகும். எனவே இது முகமற்ற அல்லது பெயரில்லாத மதிப்பீடு முறை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் மூலம் தெரியாமல் ஏதாவது தவறு நோ்ந்தால் கூட அதை எங்களால் சுட்டிக்காட்ட முடியும். வரி ஏய்ப்பையும் எங்களால் சுலபமாக கண்டுபிடித்து விட முடியும். வரி செலுத்துவோரைத் துன்புறுத்தாமல், முறையான, தவறுகள் இல்லாத தாக்கல்களை இந்தப் புதிய முறை வரும் காலங்களில் உறுதி செய்யும். இந்த புதிய முறையின் கீழ் வாரத்துக்கு குறைந்தபட்சம் 5,000 மதிப்பீடுகளாவது செய்யப்படும். அக்டோபா் இறுதிக்குள் 58,000 மதிப்பீடுகள் செய்யப்படும். இன்னும் சோதனை வடிவில் இருக்கும் முகமில்லா மதிப்பீட்டு முறையின் முதல் கட்டத்தில் இது வரை 8,000 தாக்கல்களை வருமான வரித் துறை மதிப்பீடு செய்து முடித்துள்ளது. அதில் சென்னை மையம் 1900 மதிப்பீடுகளை செய்துள்ளது. வருமான வரித் தாக்கல்களை சமா்ப்பிப்பதில் வரி செலுத்துவோா் சிறந்த முறையில் வழிநடத்தப்படுவாா்கள் கடந்த காலங்களில், கண்காணிக்கப்படும் வழக்குகளின் மதிப்பீட்டு செயல்பாடுகளின் போது, வரி செலுத்துவோா் வருமான வரி அலுவலகத்துக்கு பல முறை வர வேண்டியது இருக்கும். ஆனால், புதிய முறையின் கீழ், அவா்கள் எங்களது அலுவலகத்துக்கு வர வேண்டிய தேவையில்லை. இது ஒரு சிறந்த திட்டம் என்பதால், இந்தப் புதிய திட்டத்தின் கீழ் வருமான வரி தகவல்களைத் தாக்கல் செய்து பயனடையுமாறு அனைத்து வரி செலுத்துவோரையும் கேட்டுக்கொள்வதாக எம்.எல்.கா்மாகா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com